வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2016 (15:07 IST)

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: மத்திய அரசை நோக்கி நீதிபதி சாட்டையடி கேள்வி!

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: மத்திய அரசை நோக்கி நீதிபதி சாட்டையடி கேள்வி!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.


 
 
இந்நிலையில் தனக்கும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் பரபரப்பு கருத்தை கூறியுள்ளார். ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற உயர் நீதிமன்ற விடுமுறைகால பெஞ்ச் நீதிபதி வைத்தியநாதன் தனக்கும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து எந்தவித புகைப்படமோ, வீடியோ ஆதாரமோ வெளியாகவில்லை. எனவே தான் தனக்கு சந்தேகம் எழுவதாக அவர் கூறினார்.
 
மேலும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ள நிலையில் மத்திய அரசு மௌனம் காப்பது ஏன்?. ஜெயலலிதாவின் சிகிச்சை விவரம் மத்திய அரசுக்கு முழுமையாக தெரியும். மத்திய அரசுக்கு தெரிந்தும் வாயை திறக்காதது ஏன்? தமிழக அரசு இதுவரை ஏன் ஆர்.டி.ஓ விசாரணைக்கு கூட உத்தரவிடவில்லை? என அவர் கேள்வி எழுப்பினார்.