வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 25 ஜனவரி 2017 (18:08 IST)

’நான் அப்படி சொல்லவே இல்லை’ - சைலேந்திர பாபு விளக்கம்!

தோழர் என்ற வார்த்தைக் குறித்து தான் எந்த கருத்தும் கூறவில்லை என்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.


 

ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டபோது, புதிதாக நட்பு கொண்டவர்களுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்றும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் செல்போன்களில் தோழர் என்ற பெயரில் எண்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும் கோவை மாநகர ஆணையர் கூறியிருந்தா.

ஆனால், தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு இவ்வாறு கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து, பலரும் தங்கள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்-இல் தோழர் என்ற வார்த்தையை ஹேஸ்டேக் செய்து பரப்பினர்.

இந்நிலையில், சைலேந்திர பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளர். அதில், ”இது ஒரு பொய்யான செய்தி எனவும், தோழர் என்ற வார்த்தையில் தான் எந்த கருத்தும் கூறவில்லை. தமிழ்வழி கல்வி பயின்ற தனக்கு அந்த வார்த்தையின் பொருள் தெரியும்” என கூறியுள்ளார்.