வகுப்பறையில் ஆசிரியையை குத்திக் கொன்ற கணவர் ! திடுக் சம்பவம்

rathidevi
Last Modified திங்கள், 22 ஜூலை 2019 (17:28 IST)
வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை அவரது கணவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம்  திருமங்கலம் அரசு உதவிபெரும் பள்ளியில் பணியாற்றிவந்தவர் ஆசிரியை ரதிதேவி. இவர், இன்று வழக்கம் போல  பள்ளிக்கூடத்திற்கு வந்து 8 வகுப்பில்  பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நுழைந்த அவரது கணவர் குருமுனீஸ்வரர் தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரதிதேவியை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
 
பின்னர் குருமுனீஸ்வரர் காவல்நிலையத்திற்குச் சென்று போலீஸாரிடம் சரணடைந்தார். இதுகுறித்து போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
 
கடந்த ஒராண்டுகாலமாகவே கருத்துவேறுபாடு காரணமாக குருமுனீஸ்வரம் - ரதிதேவி பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் , இன்று பள்ளியில் உள்ள காவலரிடம் அனுமதி பெற்று உள்ளே மனைவியை பார்க்கச் சென்றுள்ளார் குருமுனீஸ்வரர். வகுப்பறையில் இருவருக்குமிடையே நீண்ட நேரமாக பேச்சு நடந்ததாகத் தேரிகிறது. இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்ததாகவும் தெரிகிறது. இதில் ஆவேசமடைந்த குருமுனீஸ்வரர் தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரதிதேவியை சரமாரியாக குத்தியுள்ளார்.  
 
இந்த சம்பவம் மாணவர்களிடையேயும் அப்பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :