வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2015 (00:12 IST)

சென்னை- ஹவுரா இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை- ஹவுரா இடையே சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படஉள்ளது. 
 

 
பண்டிகை நாட்கள் மற்றும் கும்பல் அதிகம் உள்ள காலங்களில், அதிக அளவில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.     
 
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
எர்ணாகுளம் டூ ஹவுரா செல்லும் அதிவிரைவு சுவிதா சிறப்பு ரயில் (வ.எண்.02854) அக்டோபர் 13 ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு ஹவுரா சென்றடையும்.
 
சென்னை சென்ட்ரல் டூ ஹவுரா (குளிர்சாதனப் பெட்டி வசதி) அதிவிரைவு சுவிதா சிறப்பு ரயில் (வ.எண். 02840) சென்னை சென்டிரலில் இருந்து அக்டோபர் 14 ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதி மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மாலை 6.30 மணிக்கு ஹவுரா சென்றடையும்.
 
சென்னை சென்ட்ரல்டூ சந்திரகாச்சி அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில்(வ.எண்.02842) அக்டோபர் 23ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 27ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 7.55 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 10.25 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.