செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2017 (09:29 IST)

சசிகலாவுடன் டி.டி.வி.தினகரனும் சிறைக்கு சென்றிருக்க வேண்டும்: ஆனால் தப்பித்துவிட்டார்!

சசிகலாவுடன் டி.டி.வி.தினகரனும் சிறைக்கு சென்றிருக்க வேண்டும்: ஆனால் தப்பித்துவிட்டார்!

தமிழகமே கொண்டாடிய சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்கில் முதலில் சேர்க்கப்பட்ட டி.டி.வி.தினகரன் எப்படியோ இந்த வழக்கில் இருந்து தப்பித்துவிட்டார்.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பால் சசிகால் சிறைக்கு சென்றுள்ளார். இதனால் அவரது அக்கா மகன் டி.டி.வி.தினகரனை அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமித்துள்ளார் சசிகலா. ஆனால் இந்த டி.டி.வி.தினகரனும் முன்னதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் என்கிறார் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம்மநாயுடு.
 
தற்போது துணை பொதுச்செயலாளராக உள்ள டி.டி.வி.தினகரன் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். லண்டனில் அவர் சொத்துக்களை வாங்கி இருந்தார். இதனை விசாரிக்க நல்லம்ம நாயுடு நேரடியாகவே லண்டன் சென்று ஆவணங்களை சேகரித்து வந்தார்.
 
ஆனால் டி.டி.வி. தினகரனை இந்த வழக்கில் சேர்த்ததன் மூலம் விசாரணை மிகவும் தாமதமாகியுள்ளது. இதனால் டி.டி.வி.தினகரனை இந்த வழக்கில் இருந்து தனியாக பிரித்துள்ளார் நல்லம்ம நாயுடு. இதனால் தான் அவர் தண்டனையில் இருந்து தப்பியுள்ளார். ஆனாலும் தினகரன் மீது அந்நியசெலவாணி மோசடி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள் உள்ளது.