Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சரவணன் எம்.எல்.ஏ சிக்கியது எப்படி? - வீடியோ வெளியிட்ட பத்திரிக்கையாளர் பேட்டி


Murugan| Last Updated: புதன், 14 ஜூன் 2017 (12:57 IST)
தங்கள் வலையில் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் எப்படி சிக்கினார் என்பதை தனியார் தொலைக்காட்சி நிர்வாகி ஷானவாஸ் கான் விளக்கம் அளித்துள்ளார்.

 

 
கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இருந்தபோது அவர்களிடம் சசிகலா அணியினர் பல கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் மற்றும் மூன் தொலைக்காட்சி ஆகியவை சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு ஆதரமாக, சசிகலா அணியில் இருந்து தப்பித்துவந்து பன்னீர்செல்வம் அணியில் இணைந்த எம்எல்ஏ சரவணனுடன், மூன் தொலைக்காட்சி நிர்வாகியும், பத்திரிக்கையாளருமான ஷானவாஸ் கான் உரையாடும் வீடியோவும் வெளியிடப்பட்டது. 
 
இந்நிலையில், தங்கள் வலையில் சரவணன் எப்படி சிக்கினார் என்பதை பற்றி ஷானவாஸ் கான் கருத்து தெரிவித்த போது “ கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள எல்லோருக்கும் இருக்கும் ஆர்வம்தான் எங்களுக்கும் இருந்தது. அதனால் அதுபற்றி ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்த முடிவு செய்தோம். கூவத்தூரிலிருந்து தப்பி வந்த முதல் நபர் சரவணன். எனவே அவரிடம் பேச நினைத்தோம். எனவே, ஒரு சிலர் மூலம் அவரை தொடர்பு கொண்டோம். அவர் எங்கள் அலுவலகத்திற்கு வர சம்மதம் தெரிவித்தார். இது ஒரு நாளில் நடந்தது அல்ல. மொத்தம் 6 நாட்கள் இந்த சந்திப்பு நடந்தது. எங்களுடன் அவர் பேசிய அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.
 
ஆனால், அந்த வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால், அதில் பேசுவது நான் இல்லை. என்னைப் போலவே யாரோ டப்பிங் பேசியிருக்கிறார்கள் என சரவணன் பல்டி அடித்துள்ளார். இந்த விவகாரம் இன்று சட்டசபையிலும் எதிரொலித்தது.

பத்திரிக்கை அலுவலகத்தில் சரவணன் பேசிய வீடியோ..

 


இதில் மேலும் படிக்கவும் :