மாடுகளை கடித்து குதறிய குதிரை மரணம்


Abimukatheesh| Last Modified செவ்வாய், 31 மே 2016 (13:12 IST)
விழுப்புரம் அருகே வெறிப்பிடித்த குதிரை மாடுகளை கடித்து குதறியதுவிட்டு சுவரில் மோதி இறந்தது.

 

 
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மனப்புரம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில்லி உள்ள குதிரை வியாழன்கிழமை மாலை கன்றுகுட்டி ஒன்றை கடித்துள்ளது. 
 
அதைத்தொடர்ந்து மறுநாள் வெள்ளி கிழமை அன்று மீண்டும் பல மாடுகளை கடித்து குதறியுள்ளது. இதையடுத்து அந்த குதிரையை பராமரித்து வந்த தண்டபானி குதிரையை பிடிக்க முயற்சித்த போது அவரையும் கடித்தது. 
 
இதனால் கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் குதிரையை பிடிக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் அதற்குள் அந்த குதிரை தனக்குதானே சுவரில் முட்டிக் கொண்டு இறந்து விட்டது.   
 
 


இதில் மேலும் படிக்கவும் :