வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 15 செப்டம்பர் 2014 (16:22 IST)

ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்தித்தார் நடிகர் சூர்யா

‘ஐ’படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள ஹாலிவுட் நடிகர் அர்னால்டை நடிகர் சூர்யா சந்தித்தார்.

ஆஸ்கர் ரவிசந்திரனின் பிரமாண்ட தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஐ’. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று நேரு உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்துகொள்ளவிருக்கிறார். இதற்காக சென்னை வந்த அர்னால்டு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.

அவரை நடிகர் சூர்யா இன்று சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் பேசிய  சூர்யா பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னதாக நடிகர் அர்னால்டு முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.