வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2015 (20:00 IST)

தொடர்மழையால் சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு விடுமுறை

தொடர் கனமழைக் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.


 
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை மற்றும் புறநகர்களில் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில் சென்னை புறநகரமான தாம்பரம், வேளச்சேரி, சேலையூர், முடிச்சூர் பகுதிகளில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது. மேலும் பல வீடுகளில் தண்ணீர் தேங்கி நின்று வெளியே வரமுடியாத சூழ்நிலையை உருவாக்கியது. இந்த நிலையில், இரண்டு தினம் மட்டும் தொடர்மழையில் இருந்து விடுபட்ட சென்னைக்கு, மீண்டும் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை சென்னையை புரட்டி எடுத்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
 
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்துள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுபர பகுதிகளில் கனமழை பெய் வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 47 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் தொடர்மழைக் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார். மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்
 
இந்த தொடர் மழையால் கடந்த 12 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.