செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2015 (12:37 IST)

ஆசிரியரைத் தாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள் அதிரடி நீக்கம்

கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் பள்ளியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்யப்பட்டனர்.

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில், இம்மாதம் 7ம் தேதி +2 மாணவர்கள் சிலர் பள்ளியில் உள்ள தடுப்புச்சுவரை இடித்து விட்டனர். இதையடுத்து பள்ளி தலைமையாசிரியை சுதா கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர்   சௌந்தரநாயகி புதன்கிழமை அன்று பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த்தார்.

இந்த கூட்டத்திற்கு சில மாணவர்கள் செல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அந்த மாணவர்களை கண்டித்திருக்கிறார். அதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு மாணவர்கள் உடற்கல்வி ஆசிரியரை தாக்கியுள்ளனர். அதையடுத்து அந்த மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரனை  நடத்திய  மாவட்ட அலுவலர் அந்த இரண்டு மாணவர்களையும் பள்ளியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.

இச் சம்பவம் கயத்தாறில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.