மொய் எழுதுவதிலும் புகுந்தது டெக்னாலஜி: மொய்டெக் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்


sivalingam| Last Modified வியாழன், 15 ஜூன் 2017 (05:40 IST)
இன்றைய உலகில் டெக்னாலஜி இல்லாமல் எதுவுமே நடக்காது. மனித வாழ்க்கையே டெக்னாலஜி ஆகிவிட்ட நிலையில் பாரம்பரியமாக நம்முடைய பழக்கங்களில் ஒன்றாகிய மொய் எழுதுவதிலும் தற்போது டெக்னாலஜி புகுந்துவிட்டது. இனிமேல் விசேஷங்களுக்கு 40 பக்க நோட்டை எடுத்து கொண்டு ஒரு டேபிள் சேர் போட்டு உட்கார வேண்டிய அவசியம் இல்லை.


 


மதுரையை சேர்ந்த ஒரு நிறுவனம் மொய்டெக் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனம் நம்முடைய விசேஷங்களுக்கு வரும் மொய் பணத்தை டெக்னாலஜி மூலம் நமக்கு பெற்று தருவதோடு, மொய் எழுதுபவர்களுக்கும் உடனடியாக எஸ்.எம்.எஸ் அனுப்பி விடுகிறது. அதுமட்டுமின்றி நமக்கு எவ்வளவு மொய் வந்துள்ளது, யார் யார் எவ்வளவு மொய் செய்துள்ளார்கள், இன்னும் யார் யார் மொய் செய்யவில்லை என்பதை ஆன்லைனிலேயே பார்த்து கொள்ளும் வசதியையும் செய்து தந்துள்ளது.

மேலும் நம்முடைய மொய் விபரங்களை எப்போது கேட்டாலும் சிடியில் பதிவு செய்து இந்த நிறுவனம் கொடுக்கின்றது. நமக்கு வரும் மொய்ப்பணம் ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாமல் முழு விபரங்களுடன் தகவல் தரும் இந்த மொய் டெக் மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :