வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 8 ஜூன் 2015 (18:35 IST)

ஜீலை 1 முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்றும்,  ஹெல்மட் அணியாமல் வாகனம் ஒட்டுபவர்களின்  லைசென்ஸை பறிமுதல் செய்ய பரிந்துரைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சாலைகளில் நேரும் விபத்துகளின் போது அதிக அளவிலான உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளால்தான் நிகழ்கிறது என்பதால் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 
மேலும், இருசக்கர வாகனங்கள் ஓட்டும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால், அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்றும், ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.