வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 2 டிசம்பர் 2015 (01:05 IST)

தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் முழு ஒத்துழைப்பும் அளிக்கப்படும்: மோடி உறுதி

தொடர்மழையால் தமிழகம் அவதியுற்று வரும் துரதிருஷ்டவசமான இந்த நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் முழு ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


 
தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை கனமழையினால் முழுவதுமாக போக்குவரத்து சேவை, ரயில் சேவை நிறுத்தப்பட்டு மழையால் சென்னை தத்தளித்து கொண்டு இருக்கிறது. தற்போது பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு குட்டி தீவு போல் சென்னை புறநகரங்கள் மாறி வருகிறது. மேலும், சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. 
 
இந்நிலையில், தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ள நிலவரம் பற்றி முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தொலைபேசி வழியாக நேற்று கேட்டறிந்ததாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொடர்மழையால் தமிழகம் அவதியுற்று வரும் துரதிருஷ்டவசமான இந்த நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் முழு ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சரிடம் மோடி உறுதியளித்துள்ளார்.