1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 19 மே 2017 (18:33 IST)

ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்தாலும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி வெப்ப காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
தமிழகத்தில் வெப்பத்தின் அளவு கடந்த சில நாட்களவே இயல்பை விட அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சூறை காற்றுடன் மழை பெய்தது. ஆனால் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. 
 
ஆந்திராவில் தொடர்ந்து அதிக அளவிலான வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் அங்கிருந்து தமிழகத்தை நோக்கி அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் வட தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
 
மேலும் இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்தாவது:-
 
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி  செல்சியஸ் அதிக வெப்பம் பதிவாகும். உள் மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.