கனமழை எதிரொலி: சுகாதாரத்துறை புதிய உத்தரவு


sivalingam| Last Modified செவ்வாய், 31 அக்டோபர் 2017 (11:19 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை உருவாக்கி வருகிறது. ஏற்கனவே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தற்போது மழைநீர் தேங்குவதால் மேலும் புதிய நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.


 
 
இந்த நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை இதுகுறித்து பொதுமக்களுக்கு அறிவுரையும் சுகாதார, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு உத்தரவையும் வெளியிட்டுள்ளது.
 
இதன்படி மழையால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்க தமிழகம் முழுவதும் குளோரின் கலந்த குடிநீரை தர உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாக கழுவுவது முக்கியமான வழிமுறையாகும் என்றும், சாலையோரம் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் மழையினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :