Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

லஞ்சம் வாங்கினால் குண்டர் சட்டம் பாயும்? உயர்நீதிமன்றம் ஆலோசனை

Bribe
Last Updated: புதன், 6 டிசம்பர் 2017 (12:27 IST)
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க குண்டர் தடுப்பு சட்டத்தை போல, தனியாக தடுப்பு சட்டம் கொண்டுவந்தால் என்ன? என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் பம்மல் சார் பதிவாளர் மீது குற்றம்சாட்டி மனு தாக்கல் செய்து இருந்தார். பத்திரப்பதிவு செய்ய முறையான கட்டணம் செலுத்தியும் பம்மல் சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார் என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் மீது எத்தனை வழக்குகள் உள்ளது கேள்வி எழுப்பப்பட்டது. காவல்துறையினர் தரப்பில் தந்த பதிலை ஆய்வு செய்தபோது 77 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பலரும் வழக்குகளிலிருந்து விடுதலை ஆகியுள்ளனர்.
 
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என்றும், ஊழியர்களை தண்டிக்கும் வகையில் ஏன் தனி தடுப்புச் சட்டம் கொண்டு வரக்கூடாது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை பல்வேறு கேள்விகளை முனவைத்து, பதிலளிக்குமாறு வழக்கை 11ஆம் தேதி ஓத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :