வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 29 நவம்பர் 2015 (14:33 IST)

ஜாதி அரசியல் செய்யும் எண்ணம் எங்களுக்கு கிடையாது - ராமதாஸ்

ஜாதியை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் எங்களுக்கு கிடையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
பாமகவின் வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராமதாஸ் பேசினார்.
 
அப்போது அவர் கூறுகையில், ”தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் அடங்கிய தஞ்சை தரணியில் 18 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட அதிமுக, திமுக வெற்றிபெறவில்லை என்ற நிலையை நீங்கள் ஏற்படுத்தி இருந்தால் ஆட்சியாளர்கள் திருந்தி இருப்பார்கள்.
 
ஆனால் மக்கள் இன்று இலவசங்களுக்கு வரிசை கட்டி நிற்கிறார்கள். திமுக, அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கக்கூடிய தகுதி அவர்களுக்கு இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.
 
மக்களை நம்பி அரசு கடன் வாங்கியது தான் தமிழகத்தின் வளர்ச்சியா? இன்று தமிழகத்தில் ஒவ்வொரு மக்களின் பெயரிலும் ரூ.60 ஆயிரம் கடன் உள்ளது.
 
பாமகவை சிலர் ஜாதிக்கட்சி என்று கூறுகிறார்கள். ஜாதியை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. நான் தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக, மண்ணுக்காக, தமிழர்களின் உரிமைக்காக களத்தில் நின்று போராடி உள்ளேன்” என்றார்.