வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 20 ஜூலை 2016 (08:30 IST)

லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர், அரசு பணியில் சேர அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால், லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மொடையூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் மாற்றுத்திறனாளி. இவருக்கு பதவிமூப்பு அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பகத்தில் இருந்து கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்விற்கான அழைப்பு வந்துள்ளது.
 
அவர் நேரில் சென்று அதற்கான அனைத்து ஆவணங்களையும் சம்ர்ப்பித்துவிட்டு வந்துள்ளார். ஆனால் அது தொடர்பாக அவருக்கு எந்த பணி ஆணைக் கடிதமும் வரவில்லை. இந்நிலையில் இரண்டாவது முறையாக அதே பணிக்கு நேர்முக தேர்விற்கான அழைப்பு வந்து, மீண்டும் சான்றிதழ்களை சமர்பித்துள்ளார்.
 
பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று மூன்று லட்சம் பணம் கொடுத்தால் இந்த வேலை உனக்கு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம், இல்லையென்றால் வேறு யாருக்காவது வழங்கிவிடுவோம் என்று கூறியுள்ளனர்.
 
பொன்னுசாமியும் அவரது தந்தையும் எங்களால் இவ்வளவு பெரிய தொகை கொடுக்க இயலாது என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கடன் வாங்கியாவது கொடுங்கள், ஒரே வருடத்தில் நீங்கள் சம்பாதித்து விடலாம் என்றும் பிச்சை எடுத்தாவது எங்களுக்குப் பணம் கொடு இல்லை என்றால் இந்த வேலை உனக்கு இல்லை என்று கூறியுள்ளனர்.
 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசயில் பிச்சை எடுக்க அம்ர்ந்த பொண்ணூசாமி, பிச்சை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளுக்கு பணத்தைக் கொடுத்துவிடலாம் என்றுதான் பிச்சை எடுக்க அமர்ந்தேன் என்றும் ஆனால் காவல்துறையினர் என்னை ஆட்சியரை சந்தித்து முறையிடக் கூட விடாமல் மிரட்டுகிறார்கள் என்று வேதனையுடன் கூறினார்.