பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள்: எச்.ராஜா அதிரடி!

பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள்: எச்.ராஜா அதிரடி!


Caston| Last Modified ஞாயிறு, 6 நவம்பர் 2016 (20:24 IST)
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக பல எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

 
 
தமிழகம் மாட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் உள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்கள், தலித்துகள் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.
 
இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் இந்திய தேசத்திற்கு எதிரானவர்கள் என கூறியுள்ளார்.
 
தொடர்ந்து பேசிய அவர் பொது சிவில் சட்டத்தை இஸ்லாமியர்கள் யாரும் எதிர்க்கவில்லை என்றும் சில இயக்கங்கள் தான் அந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றார். மேலும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் தேச விரோத சக்திகள் என்றும் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :