Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நிர்மலா பெரியசாமியை மோசமாக திட்டிய குண்டு கல்யாணம்!

நிர்மலா பெரியசாமியை மோசமாக திட்டிய குண்டு கல்யாணம்!


Caston| Last Updated: செவ்வாய், 21 மார்ச் 2017 (10:29 IST)
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்துள்ளது. இந்நிலையில் அந்த கட்சியின் சின்னம் தற்போது முடங்கும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டம் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

 
 
இந்த கூட்டத்தில் கட்சியின் செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி ஓபிஎஸ்-ஐ புகழ்ந்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் வளர்மதி, சிஆர் சரஸ்வதி, குண்டு கல்யாணம் போன்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிய நிர்மலா பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து, கட்சி ஒற்றுமைக்காக ஒரு சில வார்த்தைகளை கூறினேன் ஆனால் என்னை கூட்டத்தில் இருந்த சிஆர் சரஸ்வதியும், குண்டு கல்யாணமும் மோசமாக திட்டினர். வளர்மதி என்னை திட்டினார். சிஆர் சரஸ்வதி கட்சியை விட்டு வெளியே போகுமாறு கூறினார் என்றார்.
 
மேலும், இது சிறிய பிரச்சினைதான். ஜெயலலிதா தொடங்கிய கட்சியும், சின்னமும் எங்கு இருக்குமோ? அங்கு தான் நானும் இருப்பேன். இதுகுறித்து கட்சி தலைமை விளக்கம் கேட்டால் நிச்சயம் பதில் அளிப்பேன் என நிர்மலா பெரியசாமி கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :