கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி. திடீர் விடுதலை!: மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி உத்தரவு


Caston| Last Modified செவ்வாய், 29 மார்ச் 2016 (16:30 IST)
தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து முக்கிய குற்றவாளியான பி.ஆர்.பி. எனப்படும் பி.ஆர்.பழனிச்சாமி இன்று திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 
 
மதுரை மாவட்டம், மேலூர் குற்ரவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி மகேந்திரபூபதி கிரானைட் மோசடி வழக்கில் பி.ஆர்.பி.யை இன்று விடுதலை செய்திருக்கிறார். இந்த நீதிபதி மீது ஏற்கனவே குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறார் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளது.
 
மகேந்திரபூபதிக்கு உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரைத்திருந்தார். இந்த சூழ்நிலையில் தான் நீதிபதி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து முக்கிய குற்றவாளி பி.ஆர்.பி.யை விடுதலை செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :