செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2017 (11:38 IST)

ஆளுநர் வித்யாசாகர் ராவ் செய்த தவறு: அவர் அப்படி செய்திருக்கவே கூடாது!

ஆளுநர் வித்யாசாகர் ராவ் செய்த தவறு: அவர் அப்படி செய்திருக்கவே கூடாது!

தமிழகத்தில் நிலையான அரசு இல்லாமல் காபந்து அரசு நடந்து வருகிறது. இதனால் தமிழகமே ஸ்தம்பித்து பல்வேறு பணிகள் தடைபட்டுள்ளது. முதல்வரை தேர்ந்தெடுப்பதில் பெரும் குழப்பமே நீடித்து வருகிறது.


 
 
தமிழகத்தில் நிலவி வரும் குழப்பத்தை சரி செய்ய வேண்டிய ஆளுநரே குழப்பத்துக்கு காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட விதம் தவறு என குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் ஊராட்சி தேர்தல் குழு தலைவர் அமெரிக்கை நாராயணன்.
 
இது குறித்து அவர் கூறியபோது, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தான் சசிகலா தரப்பினால் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக கூறினார். ஆனால் அதன் முன்பு நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.
 
முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதம் மும்பையில் இருந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. இதனை ஆளுநர் அங்கிருந்து கொண்டே ஏற்றுக்கொண்டது தவறு.
 
மிக முக்கியமாக ஒரு முதல்வர் ராஜினாமா கடிதம் அளிக்கிறார் என்றால் நேரடியாக சென்னைக்கு வந்து ஆளுநர் அந்த ராஜினாமா கடிதத்தை அளிக்க வேண்டும். இல்லையென்றால் மும்பைக்கு அவரை அழைத்து பெற வேண்டும். இப்படி நேரடியாக முதல்வரை சந்தித்து இருந்தால் உண்மை நிலையை ஆளுநர் அறிந்திருக்கலாம் என தெரிவித்தார்.