Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மூன்று அமைச்சர்கள் பதவி பனால்: அவசரமாக சென்னை வரும் கவர்னர்

மூன்று அமைச்சர்கள் பதவி பனால்: அவசரமாக சென்னை வரும் கவர்னர்

சனி, 15 ஏப்ரல் 2017 (15:10 IST)

Widgets Magazine

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து சென்னைக்கு அவசரமாக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து மூன்று அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என பரபரப்பாக பேசப்படுகிறது.


 
 
தமிழக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், அகடம்பூர் ராஜூ, தமிழகத்தில் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு தடையாக இருந்தது, ஆதாரத்தை அழித்தல், பெண் அதிகாரியை மிரட்டியது, தவறாக நடந்து கொண்டது போன்ற புகாரில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதனால் அந்த மூன்று அமைச்சர்களை பொறுப்பில் இருந்து நீக்கவும், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை அந்த பொறுப்பில் இருந்து நீக்கவும், தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆளுநர் மும்பையிலிருந்து சென்னை கிளம்பியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
ஆளுநர் சென்னை வந்ததும், தமிழகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்கள், வருமான வரித்துறை சோதனை போன்றவற்றை தலைமைச்செயலாளர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோரை அழைத்து பேசுவார் என கூறப்படுகிறது. அதனை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தடையாக இருந்த புகார் அளிக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மனைவி கொடுத்த பானம் ; மூன்று வாரங்கள் விடாமல் செக்ஸ்

ஜிம்பாப்வேவில் மனைவி கொடுத்த ஒரு பானத்தால், அவரின் கணவர் மூன்று வாரத்திற்கு விடாமல் ...

news

ஹேமமாலினி தற்கொலை செய்துகொண்டாரா?: தினமும் சரக்கடிக்கிறார் என விமர்சனம்!

நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமமாலினி தினமும் சரக்கடிக்கிறார் என மகாராஷ்டிரா மாநில சுயேட்சை ...

news

தமிழச்சி என்பதால் உள்ளே விடவில்லை - கொந்தளித்த டிடி

தமிழச்சி என்பதால் தனக்கு ஏற்பட்ட கசப்பான ஒரு அனுபவத்தை சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி ...

news

சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா?: தினகரன் மீது நடவடிக்கை!

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணியை சேர்ந்த சசிகலா அவரது அண்ணன் மகன் ...

Widgets Magazine Widgets Magazine