1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:22 IST)

அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்கே? - அதிரடி விசாரணையை தொடங்கிய ஆளுநர்..

சசிகலாவால் சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து தமிழக ஆளுநர் வித்யாசாகர் விசாரணையை தொடங்கியுள்ளார்.


 

 
தமிழகத்தின் ஆட்சியை அமைக்கப் போவது ஓ.பன்னீர் செல்வமா? அல்லது சசிகலாவா? என்பதைத்தான் தமிழகம் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.  
 
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் நேற்று ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக எம்.எ.ஏக்கள் 129 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதால், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் எனவும் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  
 
அதேபோல், அதிமுக எம்.எல்.ஏக்களை சட்ட விரோதமாக, கடத்திச் சென்று சசிகலா தரப்பு சிறை வைத்துள்ளதாக ஓ.பி.எஸ் ஆளுநரிடம் முறையிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சசிகலா வெற்றுக் காகிகத்தில் கட்டாயப்படுத்தி அதிமுக எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டு, அது தற்போது பயன்படுத்தியுள்ளனர் எனவும், அதில் சில போலி கையெழுத்து எனவும் ஓ.பி.எஸ் தரப்பில் ஆளுநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. 
 
மேலும், சில எம்.ல்.ஏக்களை காணவில்லை என நீதிமன்றங்களில், அவர்களது குடும்பத்தினர்கள் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது...
 
இந்நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி  ராஜேந்திரன் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்த வித்யாசாகர் ராவ், அவர்களிடம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை, அரசு நிர்வாகம் குறித்து தற்போது ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்.
 
முக்கியமாக, சசிகலா தரப்பு சிறை வைத்துள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து அவர் தீவிர விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது..