1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (09:17 IST)

அப்பல்லோவில் மீண்டும் ஆளுநர் : நடந்தது என்ன?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.


 

 
உடல் நலக் குறைபாடு காரணமாக, முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஒரு மாத காலமாக சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
அவருக்கு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் மற்றும் சிங்கபூர் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரிக்க, தமிழக பொறுபு ஆளுநர் வித்யாசாகர் ராவ், கடந்த அக்டோபர் 1ம் தேதி அப்பல்லோ வந்தார். அவர் மருத்துவர்களை சந்தித்து பேசியதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
தற்போது மீண்டும், நேற்று ஆளுநர் அப்பல்லோ வந்தார். மருத்துவமனையில் அவர் சுமர் 25 நிமிடங்கள் இருந்ததாக தெரிகிறது. 
 
முதல்வர் சிகிச்சை பெறும் வார்டு வரை ஆளுநர் சென்று நலம் விசாரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதல்வருக்கு சுவாசம் தொடர்பாக சிகிச்சை மற்றும் பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்படுவதாக பிரதாப் ரெட்டி, ஆளுநருக்கு விளக்கியதாக தெரிகிறது.
 
முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் அவர் குணமடைந்து வருகிறார் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது. சிறப்பான சிகிச்சை அளித்து வரும்  மருத்துவர்களுக்கு, ஆளுநர் நன்றி தெரிவித்தார். 
 
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு அவைகளை உறுதி செய்துள்ளது.