Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அறிக்கை


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (21:55 IST)
தமிழகம் வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோரை நேற்று சந்தித்ததார். தற்போது தமிழக அரசியல் சூழல் குறித்து மேலும் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார்.

 


தமிழகம் வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோரை நேற்று தனித்தனியாக சந்தித்தார். இருவரும் அவர்களது தரப்பு கருத்து மற்றும் கோரிக்கைகளை அளுநரிடம் தெரிவித்துள்ளனர்.

இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஆளுநரை சந்தித்து தமிழகத்தின் நிலை குறித்து எடுத்து கூறியுள்ளார். இன்று ஆளுநர் காவல்துறை ஆணையர் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் சூழல் குறித்து கேட்டு அறிந்தார்.

தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு நேற்று இரவே அறிக்கை அனுப்பினார். தற்போது மேலும் ஒரு அறிக்கையை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார். ஆளுநர் அனுப்பியுள்ள அறிக்கையில் அதிகாரிகள், காவல்துறை தந்த தகவல்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது பற்றியும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தன்னுடைய முடிவு குறித்து அறிக்கையில் தெரிவிக்கவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :