ஆளுநர் கேட்ட கேள்வியில் அதிர்ந்த சசிகலா தரப்பு


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (21:00 IST)
இன்று மாலை 5.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பட்டியலை கொடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அப்போது ஆளுநர் அவரிடம் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போய்விட்டாராம்.

 

 
சொத்து குவிப்பு வழக்கில் சசிகாலா எதிராக தீர்ப்பு வந்த பின்னர் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக  இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அழைப்பு விடுத்தார். 
 
இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பட்டியலை கொடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அப்போது அளுநரிடம் அவர் ஒரு கேள்வி கேட்டதாகவும், அதில் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்ததாவும் கூறப்படுகிறது.
 
எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்கு கடைசி வரை ஆதரவு அளிப்பார்கள் என்று ஆளுநர் கேட்ட கேள்வியால் அதிர்ச்சியை அடைந்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :