Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா முதலமைச்சர் ; கவர்னர் மவுனம் : கலக்கத்தில் கார்டன்

சனி, 7 ஜனவரி 2017 (11:26 IST)

Widgets Magazine

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல் அமைச்சராக பதவி ஏற்பது குறித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட தகவலுக்கு, அங்கிருந்து எந்த பதிலும் வராதது சசிகலா குடும்பத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாம்.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின் அவரை தமிழகத்தின் முதலமைச்சர் பதவியிலும் அமர வைக்கும் முயற்சியில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவரின் கீழ் செயல்படும்  புதிய அமைச்சரவை கூட தயாராகிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
தற்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து சசிகலா உரையாடி வருகிறார். இந்த கூட்டம் வருகிற 9ம் தேதி நடைபெறுகிறது. அதன் பின் ஜனவரி 12ம் தேதி அவர் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், சசிகலா முதல்வராக பதவி ஏற்பதற்கான தேதி குறித்து ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதாம். ஆனால் அங்கிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. 
 
சசிகலா முதல் அமைச்சர் பதவியில் அமர்வதில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை எனவும், அதனால்தான் இன்னும் சாதகமான பதில் வரவில்லை எனவும் தெரிகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நேதாஜியின் மரணம் விபத்து அல்ல கொலை; விலகும் மர்மங்கள்!!

இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயரர்களின் ஆட்சிக்கு எதிராக போராடிய இந்திய தலைவர் ...

news

சசிகலாவிற்காக கூடும் பெண்கள் ; தலைக்கு ரூ.200 : கூலிக்கு ஆள் பிடிக்கும் அதிமுகவினர்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வந்து செல்லும் இடங்களில் கூட்டத்தை கூட்டுவதற்கு, கூலிக்கு ...

news

தீபா எடுத்த அதிரடி முடிவு : தடுக்க துடிக்கும் சசிகலா குடும்பத்தினர்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அன்று, அவரின் அண்ணன் மகள் ...

news

ஜனவரி 12ம் தேதி முதல் அமைச்சர் ஆகிறாரா சசிகலா?

அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா பொங்கலுக்கு முன் தமிழக முதலமைச்சராக ...

Widgets Magazine Widgets Magazine