1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2015 (06:18 IST)

குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் தமிழக அரசு

மக்களை வாட்டும் வெங்காய விலையை கட்டுப்படுத்த, வெளி மாநிலங்களிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து, அதை பண்ணைப் பசுமை கடைகள் மூலம் மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
\

 
இது குறித்து, தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் வெளிச்சந்தையில் கட்டுக்கடங்காமல் செல்லும் காலங்களில், அதை கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், நுகர்வோர்களுக்கு விலை குறைவாக தரமான பொருள் கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இதற்காக, விலை நிலைப்படுத்தும் நிதியம் ஒன்று 100 கோடி ரூபாய் நிதித் தொகுப்புடன் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு,  துவரம் பருப்பு,  உளுத்தம் பருப்பு,  மிளகாய்,  புளி மற்றும்  நல்லெண்ணெய் போன்ற அத்தியவாசியப் பொருட்களின் விலையினை கட்டுப்படுத்துவதற்காக இந்த நிதியம் பயன்படுத்தப்பட்டுடகிறது.
 
தற்போது, பருவநிலை மாறுதலால் காரணாக, வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
 
எனவே, இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த, வெங்காய விலையேற்றத்தை கட்டுப்படுத்த வெளி மாநிலங்களிலிருந்து வெங்காயம் கொள்முதல் செய்து, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்ய  தீவிர நடவடிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் லாசல்கானில் இருந்தும், கர்நாடக  மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்தும் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 42 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் வாயிலாக கிலோ 55 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறப்படுள்ளது.
 
தமிழக அரசின் இந்த நடவடிக்கு, மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.