வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (05:11 IST)

அரசு ஊழியர்கள் வாக்குளை அப்படியே அள்ளிய அதிமுக - அதிர்ச்சியில் திமுக

அரசு ஊழியர்கள் வாக்குளை அப்படியே அள்ளிய அதிமுக - அதிர்ச்சியில் திமுக

ஒரே ஒரு அரசாரணை மூலம் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்ப வாக்குகளை அதிமுக அப்படியே அள்ளிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 

 
அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்றால், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தமிழக அரசிடம் கட்டாய அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
மேலும், தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக எம்.எல்.,ஏ. பழ.கருப்பைய்யா அதிமுக அரசு மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
 
இந்த நிலையில் தான், அதிமுக அரசு செய்தற்கு பல்வேறு அரசியல் பின்னணி உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக அரசு மீதும், தற்போது உள்ள அரசு உயர் அதிகாரிகள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.
 
இதனால், அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதே வேளையில் ஊழல் குறித்து அரசு ஊழியர்களுக்கு என ஒட்டுமொத்தமாக ஒரு அரசாணையை வெளியிட்டால், அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு சட்ட பாதுகாப்பு கிடைக்கும். இதன் மூலம் உயர் அதிகாரிகளும் தப்பித்துக் கொள்ளலாம்.
 
மேலும், வரும் சட்ட மன்றத் தேர்தலில், இந்த அரசாணையைக் சுட்டிக் காட்டி, அரசு ஊழியர்கள் குடும்பங்கள் அனைவரது வாக்குகளையும் அள்ளிவிடலாம் என கணக்கு போட்டே அதிமுக அரசு அந்த அரசாணையை வெளியிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு உலா வருகிறது.
 
அதிமுகவின் இந்த மாஸ்டர் பிளான் குறித்து லேட்டாக ஸ்மைல் செய்த திமுக பெரும் அட்செட்டில் உள்ளது.