1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2015 (15:22 IST)

இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் தமிழகத்தில் 2,500 கிலோ தங்கம் விற்பனை!

இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் 2,500 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது.
 
அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் தங்கம் பெருகும் என்ற எண்ணம்  மக்கள் மனதில் மேலோங்கியுள்ளது. அதனால் நகை கடை நடத்துவோரும் அட்சய திருதியை அன்று நகை வாங்குபவருக்கு பல்வேறு சலுகைகளை அறிவிப்பதால் தங்க நகைகளை வாங்க பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர்.
 
தமிழகத்தில் பெரிய நகை கடைகள் 12 ஆயிரமும், சிறிய அளவிலான நகை கடைகள் 10 ஆயிரமும் உள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு அட்சய திருதியை அன்று 700 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு 720 கிலோவும், 2013 ஆம் ஆண்டு 1100 கிலோ தங்கமும் விற்பனை ஆனது.
 
கடந்த ஆண்டு 2014-ல்  அட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை 1,500 கிலோவை தொட்டது. இந்த ஆண்டு கிராம் தங்கம் ரூ.2,526-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை குறைவாகக் காணப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்க நகைகளை வாங்கினர். இதனால் இந்த ஆண்டு தங்கம் விற்பனை 2,500 கிலோவை தொட்டு சாதனை படைத்துள்ளது.