வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 4 மே 2015 (15:25 IST)

10 ஆடுகளை கடித்துக் குதறிய சிறுத்தை: பொதுமக்கள் பீதி

பேர்ணாம்பட்டு அருகே தமிழக அரசு இலவசமாக கொடுத்த ஆடுகளை சிறுத்தை கடித்துகொன்று அட்டகாசம் செய்துள்ள சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பேரணாம்பட்டு அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமாக 30 ஆடுகள் உள்ளன.
 
இவருக்கு சொந்தமான 15 ஆடுகளும் மேலும் அதே பகுதியை சேர்ந்த டேவிட் , விக்டோரியா ஆகியோரின் ஆடுகள் உள்பட மொத்தம் 30 ஆடுகளை பன்னீர்செல்வம் பொறுப்பில் விட்டுள்ள நிலையில் அவர்கடந்த 6 மாத காலமாக பராமரித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில், இவர் வழக்கம்போல் அருகிலுள்ள மலைப் பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு வீட்டிற்கு அருகில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துள்ளார்.
 
அப்போது, அந்த பட்டிக்கு நள்ளிரவில் வந்த சிறுத்தை 10 ஆடுகளை கடித்து கொன்றுள்ளது.மற்ற ஆடுகள் சிறுத்தைக்கு பயந்து மலைப் பகுதிக்குள் ஓடிவிட்டன. காலையில் பட்டியில் ஆடுகள் சிறுத்தை கடித்து இறந்துள்ளதைப் பார்த்த பன்னீர்செல்வம் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
 
இதைத் தொடர்ந்து, அங்குவந்த வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து அதை தேடிவருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.