வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2019 (18:47 IST)

தஞ்சையை தள்ளிவிட்ட அதிமுக: கூட்டணிக்கு பின் குமுறும் தமாகா

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தமாகாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கப்பட்ட தொகுதியால் தமாகா கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது. 
 
தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் சொந்த ஊர் பாபநாசம். எனவே, எனவே பாபநாசம் சட்டமன்ற தொகுதி அடங்கி உள்ள மயிலாடுதுறையை ஒதுக்குமாறு தமாகா கேட்டது. ஆனால், அதிமுக இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. 
 
மேலும், தஞ்சை தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் ஆர்வம் காட்டாததால், அந்த தொகுதியை கூட்டணி கட்சியான தமாகாவுக்கு ஒதுக்கி விட்டதாக தெரிகிறது. கேட்ட தொகுதி கிடைக்காததால், தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து வாசன் பின் வாங்கியுள்ளாராம். 
எனவே, தஞ்சையில் தமாக சார்பில் பட்டுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ ரங்கராஜன் அல்லது நடராஜன் ஆகியோரில் ஒருவரை களமிறக்க வாசன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதனால், தமாகா தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளார்களாம். முக்கியமாக தனி கட்சி துவங்கினாலும் காங்கிரஸ் குடும்பமாக இருந்த தமாகா பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதும் தொண்டர்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளதாம்.