Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அக்காவின் கணவரால் பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற சிறுமி தற்கொலை!

அக்காவின் கணவரால் பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற சிறுமி தற்கொலை!

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (13:52 IST)

Widgets Magazine

மதுரை அருகே சிறுமி ஒருவர் தனது அக்காவின் கணவரால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமடைந்து குழந்தை பெற்றுள்ளார். குழந்தை பெற்றுக்கொண்ட அந்த சிறுமி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.


 
 
மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் பெரியார் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தை பார்த்து அங்கு நுழைந்த சிறுமியின் அக்காவின் கணவர் 28 வயதான லட்சுமணன் சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
தனது அக்காவின் கணவரால் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உடனடியாக வீட்டில் அந்த சிறுமி சொல்லவில்லை. இதனால் சிறுமி கர்ப்பமடைந்த பின்னரே அது தெரியவந்தது. இதனையடுத்து லட்சுமணன் மீது புகார் அளிக்கப்பட்டு அவர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அந்த சிறுமி குழந்தை பெற்றுள்ளார். இதனால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மனமுடைந்து நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சந்திர கிரகணம் அன்று சிறுவன் நரபலி?: சாமியார் தலைமறைவு!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சிறுவன் ஒருவன் சந்தேகத்துக்குறிய முறையில் ...

news

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: பள்ளி மீது பொதுமக்கள் கல்வீச்சு!

ஈரோட்டில் பள்ளி மாணவி ஒருவருக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ...

news

டெல்லியில் ஓபிஎஸ், எடப்பாடி : இரு அணிகளும் இணைவு?

அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

news

பிஞ்சு குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொரியர் அனுப்பிய தாய்....

தனக்கு பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி பார்சல் செய்து அனாதை இல்லத்திற்கு ஒரு ...

Widgets Magazine Widgets Magazine