செயின் பறிப்பு சம்பவத்தில் சிக்கிய பெண் – அதிர்ச்சியளிக்கும் பின்னணி !

Last Modified வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (10:53 IST)
சென்னையில் சில தினங்களுக்கு முன்பாக நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் அழகுநிலையம் நடத்திவரும் பிரசன்ன லிப்சா எனும் பெண்ணிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக செல்போனைப் பறித்து சென்றனர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர். அதில் பைக்கை ஓட்டும் இளைஞன் அந்த செல்போனைப் பறிக்க பின்னால் அமர்ந்திருக்கிறார் ஒரு இளம்பெண். இது சம்மந்தமான புகைப்படம் வெளியாகி பரபரப்புகளைக் கிளப்பியுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்ததும், சென்னையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்கள் வந்த வண்டி திருட்டு வண்டி என்பதும் வேளச்சேரியில் அந்த வண்டியைத் திருடிவிட்டு கிண்டியிலும் இதேப்போல ஒரு செல்போனை திருடியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த இளைஞனையும் அந்த பெண்ணையும் கைது செய்ய போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அந்த இளைஞன் சூளைமேட்டை சேர்ந்த டாட்டூ கலைஞர் ராஜூ என்பதும் அந்த பெண் கல்லூரி மாணவி ஸ்வாதி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பெண் வெளியூரில் இருந்து வந்து சென்னையில் தங்கி படித்து வருகிறார். போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியதால் அதற்கான செலவுகளுக்காக இதுமாதிரி வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :