செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 23 நவம்பர் 2016 (14:05 IST)

மதனுக்கு உதவிய 4 பெண் தோழிகள் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் - அதிர்ச்சி தகவல்

6 மாதமாக தலைமறைவாக வேந்தர் மூவிஸ் மதனுக்கு அவரின் பெண் தோழிகள் 4 பேர் மற்றும் சில உயர் போலீஸ் அதிகாரிகள் உதவி செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.


 

 
6 மாதங்களாக தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன், நேற்று திருப்பூரில் வர்ஷா என்ற பெண்ணின் வீட்டில் இருந்த ரகசிய அறையில் பதுங்கியிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். 
 
தற்போது, 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே வருகிற  29ம் தேதி வரை அவரிடம் போலீசார் விசாரணை செய்வார்கள்.
 
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மதனுக்கு யார் யாரெல்லாம் உதவி செய்து வந்தார்கள் என போலீசார் விசாரணை செய்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
மதன் எங்கு சென்றாலும், வீட்டை லீசுக்கு எடுப்பார் அல்லது அந்த வீட்டையே விலைக்கு வாங்குவார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவருக்கு சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த ஒரு பெண் தோழி உதவி செய்துள்ளார். அவரின் பேரில்தான் உத்தரகாண்டில் 60 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்கி மதன் தங்கியிருந்தார். போலீசார் அங்கு செல்வதற்குள் மதன்  அங்கிருந்து தப்பி விட்டார்.
 
அதன்பின், கோவையில் வசிக்கும் சேகர் என்பவர்தான் மதனுக்கு பண உதவிகளை செய்து வந்துள்ளார். அதேபோல், சென்னை போரூரை சேர்ந்த ஒரு பெண்ணும் மதனுக்கு சில உதவி செய்துள்ளார். அந்த பெண் மதனுடன் வட மாநிலங்களில் ஒன்றாக சுற்றியுள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
 
அந்த பெண்ணின் வாட்ஸ் அப் உரையாடல் மூலம், அவர் சேகரிடம் உரையாடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், ஒருமுறை பேசியவரிடம் மதன் மறுமுறை பேசுவது கிடையாது. எனவே, விசாரணையில் சிக்கல் நீடித்தது.
 
அதன்பின் தான், திருப்பூரில் உள்ள வர்ஷா விட்டிற்கு சென்று மதன் பதுங்கியிருந்தார். அவரது விட்டில் எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு ரகசிய அறையை மதனுக்காகவே கட்டியுள்ளார் வர்ஷா. அங்கு மதன் தங்கியிருந்த போதுதான் மதன் போலீசாரிடம் சிக்கினார். 
 
இவர்கள் போக, கேரளாவைச் சேர்த ஒரு பெண்ணும் மதனுக்கு உதவிகள் செய்துள்ளார். மேலும், சில ஆண் நண்பர்கள், முக்கியமாக சில ஐ.பி.எஸ் அதிகாரிகளும் மதனுக்கு உதவி செய்து வந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். 
 
அவர்கள் அனைவரிடமும் போலீசார் விரைவில் விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.