வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2017 (09:46 IST)

பரிசு பொருள் வழக்கு ; ஜெ. விடுவிப்பு - மாட்டிக்கொண்ட செங்கோட்டையன்?

பரிசு பொருள் வழக்கிலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் மீதான வழக்கு விரைவில் தொடங்கவுள்ளது.


 

 
1992ம் ஆண்டும் ஜெ. முதலமைச்சராக இருந்த போது, அவரது பிறந்த நாளில் ரூ.2 கோடி மதிப்பிலான ஏராளாமன பரிசு பொருட்களும், காசோலைகள் மற்றும் டி.டி.க்கள் அவருக்கு வந்தது. அரசு விதிப்படி முதல்வாராக இருக்கும் ஒருவர் பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா அவருக்கு வந்த காசோலை மற்றும் டி.டி.க்களை அவரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து ஜெ. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது
 
எனவே, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ  மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்து விட்டதால், அவர்களை இந்த வழக்கிலிருந்து உச்ச நீதிமன்றாம் விடுவித்துள்ளது. ஆனால், செங்கோட்டையன் மீதான வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். 
 
இந்த வழக்கின் தீர்ப்பு செங்கோட்டையனுக்கு பாதகமாக முடியும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. அப்படி நடந்தால், அவரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் என எதிர்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாஃபா பாண்டியராஜன் வகித்து வந்த கல்விதுறை அமைச்சர் பதவி, தற்போது செங்கோட்டையனுகு சசிகலா தரப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது..