Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சேரி மக்களை கொச்சைப்படுத்தும் பிக் பாஸ் காயத்ரியின் ஜாதிய பேச்சு: வலுக்கும் கண்டனங்கள்!

சேரி மக்களை கொச்சைப்படுத்தும் பிக் பாஸ் காயத்ரியின் ஜாதிய பேச்சு: வலுக்கும் கண்டனங்கள்!


Caston| Last Modified புதன், 12 ஜூலை 2017 (12:02 IST)
விஜய் டிவி ஒளிபரப்பி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடன மாஸ்டர் காயத்ரி ரகுராம் தலித் மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக சேரி பிஹேவியர் என கூறியது தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
பல எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். காயத்ரி அப்படி கூறியிருந்தாலும், விஜய் டிவி நிர்வாகம் அதை ஒளிபரப்பியது அதை விட பெரிய தவறு. இதற்காக விஜய் தொலைக்காட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
 
இதற்கு முன்னர் கூட காயத்ரி ரகுராம் எச்ச என கூறியது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சேரி பிஹேவியர் என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகை ஓவியாவை திட்டுவதற்காக தான் காயத்ரி சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
 
சேரி பிஹேவியர் என்று பிக்பாஸில் ஓவியாவை திட்டும் காயத்ரி மூலம் அவரது ஜாதிய வன்மம் வெளிப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்கள் கருத்துக்கள் வருகிறது. சேரி பிஹேவியர் என்று சொன்ன காயத்ரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். பட்டியல் சாதி மக்களை வார்த்தை ரீதியாக இழிவு படுத்துவது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015-இன் கீழ் குற்றமாகும்.


இதில் மேலும் படிக்கவும் :