வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (04:08 IST)

காந்திக்கு வந்த சோதனை: தமிழருவி மணியன் வேதனை

சென்னை மெரினாவில் நடைபெற உள்ள கள்விற்கும் போராட்டம் வருத்தம் அளிப்பதாக காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.


 
இது குறித்து, காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மனித குலத்தின் மாபெரும் முன்னேற்றங்களுக்கு  அடித்தளமாக அமைந்திருப்பது விழிப்புணர்வுதான். விழிப்புணர்வு தான் மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகிறது. அந்த விழிப்புணர்வை முழுமையாக மழுங்கச் செய்து மயக்கத்தில் ஆழ்த்துவது தான் மது.
 
உடலையும் அழித்து உள்ளத்தையும் கெடுக்கும் மதுவுக்கு எதிராகக் காலம் எல்லாம் போராடியவர் அண்ணல் காந்தியடிகள். சட்ட மறுப்பு இயக்கப் போராட்டங்களை வைஸ்ராய் இர்வினுடன் சேர்ந்து செய்த ஒப்பந்தத்தின் மூலம் காந்தியடிகள் நிறுத்திய போதும் கள்ளுக்கடை மறியலை மட்டும் நிறுத்த சம்மதம் தெரிவிக்கவில்லை.
 
போதை அதிகமுள்ள மதுவைவிட, போதை குறைவான கள் குடிப்பது நல்லது என்று கூறுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
 
வாழ்நாள் முழுவதும் கள்ளுக்கு எதிராக வேள்வி நடத்திய காந்தியடிகள் பிறந்த நாளில்  தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நண்பர் நல்லசாமி, சென்னை  மெரினா கடற்கரையில்  கள் விற்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது  வருந்தம் அளிக்கின்றது.
 
மகாத்மாவின் வழியில் நடக்காவிட்டால் கூடபரவாயில்லை. அவரது பிறந்த நாளில் அவரது உயர்ந்த வாழ்க்கை நோக்கத்தை அவமானப்படுத்தாமல் இருப்பது நலம்.
 
எனவே, நல்லசாமி போன்றவர்கள் கெட்ட செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நல்லவைகள் செய்ய முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.