வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 21 ஏப்ரல் 2018 (12:20 IST)

ஓசானிக் பினாமினா - ராட்சத கடல் அலைகள்: மக்களே உஷார்...

தமிழக தென் மாவட்ட கடலோர பகுதிகளில் இன்று முதல் நாளை வரை கடலில் ராட்சத அலைகள் எழும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
அதாவது தமிழகத்தின் தென் மாவட்ட கடலோர பகுதிகளான கன்னியாகுமாரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படுமாம். மேலும், இன்று காலை முதல் நாளை வரை 18 முதல் 22 வினாடிகள் இடைவெளியில் கடல் அலைகள் 8.5 அடி முதல் 12 அடி வரை எழும்புமாம்.
 
கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பய்தால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், மக்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால், இதன் தாக்கம் கடற்கரை பகுதியிலும் இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த கடல் சீற்றத்தை ஓசானிக் பினாமினா ( Oceanic Phenomenon ) என அழைக்கின்றனர். தற்போது கோடை வெயிலின் வெப்பம் அதிக அளவில் உள்ளதால், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர் கடலில் ஏற்பட்ட இயற்கை மாற்றத்தின் காரணமாக தென் கடல் பகுதியில் இருந்து வட கடல் பகுதிக்கு நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனால், எதிர்திசையில் நீரோட்டம் உள்ளதால், கப்பல்கள் பயணிக்க முடியாமல் ஆழ்கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனவாம்.