Widgets Magazine

ஜி.ஏ.வடிவேலு மரணம்


K.N.Vadivel| Last Modified வியாழன், 14 ஜனவரி 2016 (00:06 IST)
சுதந்திர போராட்ட தியாகி ஜி.ஏ.வடிவேலு இயற்கை எய்தினார்.
 
 
தர்மபுரி மாவட்டம், அன்னசாகரம் கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் ஜி.ஏ.வடிவேலு வயது (91). சுதந்திர போராட்ட தியாகி. ஜனதா தளம் தலைவராகவும் இருந்து வந்தார்.
 
இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால், சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், ஜி.ஏ.வடிவேலு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். 


இதில் மேலும் படிக்கவும் :