1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (17:14 IST)

சுப்பிரமணியசாமி மீது ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை

சுப்பிரமணியசாமி மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
 
தமிழக மீனவர்கள் பற்றி அவதூறாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்ததாக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி மற்றும் ஆங்கில நாளிதழின் ஆசிரியர், வெளியிட்டாளர் ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதா சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்நிலையில், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி ஆங்கில நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
 
சுப்பிரமணியசாமி மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த மேலும் இரண்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.