வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2015 (21:17 IST)

திருநெல்வேலியில் இயங்கி வரும் குளிர்பான ஆலையை மூடக்கோரி போராட்டம்

திருநெல்வேலியில் உள்ள கோக் குளிர்பான ஆலையை மூடக்கோரி வணிகர் சங்கத்தினர், தேமுதிக, இந்திய கம்னியூஸ்ட், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 
 
திருநெல்வேலி, கங்கைகொண்டான் சிப்காட்டில் கோக் குளிர்பான ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், அங்கு 36 ஏக்கர் பரப்பளவில் பெப்சி குளிர்பான ஆலைக்கான அனுமதியையும் தற்போது தமிழக அரசு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த ஆலைக்கு தாமிரபரணி நதியிலிருந்து தினமும் 9 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது, எனவே இந்த அனுமதியை தமிழக அரசு ரத்து செய்யகோரியும் வணிகர் சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக, இந்திய கம்னியூஸ்ட், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.