Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

போயஸ் கார்டனில் இருந்து சரணடைய பெங்களூரு புறப்படுகிறார் சசிகலா!

Sasikala| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (11:55 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்  குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. சசிகலா உள்ளிட்ட மூவரின் 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். ஜெயலலிதா மரணடைந்ததால் அவர் மீதான வழக்கு மட்டும் முடித்து  வைக்கப்பட்டது. சசிகலா உள்ளிட்டோர் உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

 
இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று சசிகலா சரணடையவில்லை. இந்த  நிலையில் நீதிமன்றத்தில் சரணடைய உச்சநீதிமன்றத்தில் இன்று சசிகலா தரப்பு வழக்கரிஞர் கால அவகாசம் கோரினார். உடல்நிலையை காரணம் காட்டி வாய்மொழியாக வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
சரணடைய சசிகலாவுக்கு  அவகாசம் தர முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது, எனவே உடனடியாக சசிகலா உள்ளீட்ட மூவரும் பெங்களுரு நீதிமன்றத்தில் சரணடைய  வேண்டும் எனவும்  உச்ச நீதிமன்றம் உறுதியாக கூறிவிட்டது..
 
இந்நிலையில், சசிகலா உள்ளிட்ட மூவரும் போயஸ்கார்டனில் இருந்து காரில் பெங்களூரு செல்ல தயாராகி வருகிறார்கள். மேலும் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :