Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் 30 முதல் லாரிகள் ஓடாது! சுங்கச்சாவடி அடாவடியால் லாரி உரிமையாளர்கள் அதிரடி

sivalingam| Last Updated: சனி, 18 மார்ச் 2017 (10:49 IST)


இந்தியா முழுவதிலும்  26 சுங்கச்சாவடிகளில் வரி வசூல் செய்து கொள்வதற்கான ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் வரி வசூல் செய்வதை கண்டித்து வரும் மார்ச் 30ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் லாரிகள் இயங்காது என்றும் தென் மாநிலங்களின் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்தபின்னரும் வரி வசூலிக்கும் சுங்கச்சாவடிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, 'தென்னிந்திய அளவிலான லாரிகள் சம்மேளனம் அறிவித்து உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் 30-ந்தேதி முதல் தமிழகத்தில் இயங்கும் சுமார் 4 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படும். எனவே மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பாதிக்கப்படும் நடைமுறை உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :