இலவச பஸ் பாஸை புதுப்பித்து தருவதில் காலதாமதம் - அமைச்சர் விஜயபாஸ்கர் மெத்தனமா?


Murugan| Last Updated: வியாழன், 13 ஏப்ரல் 2017 (13:57 IST)
தமிழக அளவில் ஏதாவது ஒரு துறை அமைச்சர் தொகுதி என்றால் அந்த மாவட்டத்தில் அந்த தொகுதி அமைச்சரின் செயலை வைத்து முன் நிறுத்தி காண்பிப்பது அப்போது முதல் ஆண்ட தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி.. ஆளுகின்ற அ.தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி.. தற்போது செய்தியாளர்களை ஆங்காங்கே பொதுக்கூட்டங்களில் விளாசி வந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரசு தொகையுடன் கொடுக்கின்ற (DIPR) இலவச பஸ் பாஸை புதுப்பித்து தருவதில் பாரபட்சம் காட்டுவதாக செய்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 


 
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ வாக கடந்த வருடம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க தொகுதி எம்.எல்.ஏ-வாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு செய்தியாளர்கள் உதவியிருந்ததால் தான் 441 வாக்குகள் வித்யாசத்தில் இவர் வெற்றி பெற்றது என்பது அனைவரும் தெரிந்த ஒன்றாகும். 
 
இந்நிலையில், கடந்த சில மாத காலமாக கரூர் மாவட்டம் மட்டுமில்லாது திருச்சி மாவட்டம், வையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செய்தியாளர்களை மிகவும் கேவலப்படுத்தி பேசி வந்த இவரது செயல்களுக்கு ஆங்காங்கே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இவரையும், இவர் சார்ந்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பதவி வகிப்பதால் அ.தி.மு.க கட்சியின் செய்தியையும் புறக்கணித்தனர். 
 
இந்நிலையில் கரூர் மாவட்ட நிருபர்கள் மட்டும் ஆங்காங்கே செய்திகள் சேகரித்து வெளியிட்டு வந்தனர். ஆனால் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டு வந்த அம்மா வாட்டர் என்கின்ற திட்டத்தில் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டதையும், மேலும் செந்தில் பாலாஜி கொண்டு வந்த பேருந்து பயணிகள் வெயில் காலத்தில் குளிர்விக்கும் விதமாக ஏ.சி. பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றைகளை இவர் அப்படியே விட்டு விட்டு, அரசியல் காழ்புணர்ச்சி விதமாக கரூர் மக்களையும், அ.தி.மு.க கட்சியில் அவரை சார்ந்தவர்களையும் நேரிடையாகவும் பழி வாங்கி வந்த நிலையில் ஆங்காங்கே ஒரு சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தனர். 
 
இந்நிலையில் ஆண்டு தோறும் செய்தி மக்கள் தொடர்பு துறையில் ரூ.12 ஆயிரத்து 800 வீதம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு செய்தியாளர் வீதம் போக்குவரத்து துறை மூலம் வழங்கப்படும் இலவச பஸ்பாஸ் பல்வேறு மாவட்டங்களில் புதுப்பித்த நிலையில், இங்கு மட்டுமே புதுப்பிக்க வில்லை. மேலும், செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜுக்கு பைல் அனுப்பபட்டு அங்கிருந்து போக்குவரத்து துறைக்கு அனுப்ப பட்டு சுமார் இன்று வரை 12 நாட்கள் ஆகியும் பஸ்பாஸ் புதுப்பித்து தராததற்கு கரூர் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும் போக்குவரத்து துறை அமைச்சர் சொந்த தொகுதியிலேயே அமைச்சரின் கட்டுப்பாட்டிற்குள் வரும் அதுவும் அரசே ஒவ்வொருவருக்கும் தொகை தரும் பஸ் பாஸை புதுப்பித்து தருவதில் அலட்சியம் காட்டும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த செயலால் ஏற்கனவே அந்தரத்தில் தொங்கும் அ.தி.மு.க அரசிற்கு மேலும் புகைச்சலை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும் அ.தி.மு.க வினரே குற்றம் சாட்டியுள்ளனர். 

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :