வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 21 டிசம்பர் 2016 (18:36 IST)

ராம மோகன் ராவ் வீட்டில் சிக்கிய 44 கிலோ தங்கம்...

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 44 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில், இன்று அதிகாலை 5 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல், திருவான்மியூர் பகுதியில் உள்ள அவரது மகன் விவேக் வீடு மற்றும் ஆந்திராவில் உள்ள ராம் மோகனின் வீடு ஆகிய இடங்களிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சேதனை நடத்தினர். 
 
அதோடு விடாமல், தலைமை செயலகத்தில் உள்ள ராம மோகன் ராவ் அலுவலக அறையிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். தமிழக தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் நுழைந்து சோதனை செய்தது இதுவே முதல் முறை. இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், இந்த சோதனையின் மூலம் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் 4 கிலோ தங்கமும், ஆந்திராவில் உள்ள வீட்டில் 40 கிலோ தங்கம் என மொத்தம் 44 கிலோ தங்கமும், ரூ. 26 லட்சம் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
மேலும், சில முக்கிய சொத்து ஆவணங்களும், முக்கியமாக ராம மோகன் பயன்படுத்தும் லேப் டாப்பிலிருந்து பல முக்கிய தகவல்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாக தெரிகிறது.
 
ராம மோகன் ராவை குறி வைத்து நடத்தப்பட்டிருக்கும் சோதனை, தமிழக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.