வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 3 அக்டோபர் 2015 (14:47 IST)

அதிமுக, திமுக கட்சிகளுக்கு எதிராக நான்கு கட்சி கூட்டணி

இன்று மதிமுக பொது செயலாளர் வைகோ தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக கட்சிகளுக்கு எதிராக மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து புதிய தேர்தல் கூட்டணி அமைக்க உள்ளது எனவும். இது பற்றிய அதிகாரப் பூர்வமான அறிவிப்பை நாளை மறுநள் திருவரூரில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறுமலர்ச்சிப் பிரச்சாரப் பயணத்தைத் இன்று மாலை 3 மணி அளவில் காஞ்சிபுரம் பெரியார் தூணிலிருந்து தொடங்கும் வைகோ தாம்பரத்தில் நிறைவு செய்கிறார்.

அதனையொட்டி இன்று காலை காஞ்சிபுரம் சென்ற வைகோ கழக நிர்வாகிகளுடன் அண்ணா அவர்களின் இல்லம் சென்று அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ அதிமுக, திமுக கட்சிகள் கமிஷன் கட்சிகள் எனவும் தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து மதுவிற்கு எதிராக வலியுறுத்த உள்ளோம் என்றார்.

இன்று தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் கட்சியாக மாறிவிட்டது. இந்த 2 கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் நல கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டது, இந்த இயக்கம் அரசியல் இயக்கமாக மாற்றப்படும் என்றார். தமிழ்நாட்டில் எந்த கட்சியையும் சேராதவர்கள் 65 சதவீதம் உள்ளனர். அவர்களை சந்தித்து நாங்கள் ஆதரவு கேட்போம் எனவும் அவர்களின் ஆதரவுடன் நாங்கள் நிச்சயம் ஜெயிப்போம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம். கூட்டணி குறித்து திருவாரூரில் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.