வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 26 மே 2015 (15:13 IST)

ட்விட்டரில் இணைந்தார் ப.சிதம்பரம்

சமுகவலைதளமான ட்டிவிட்டரில், முன்னாள் மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம் இணைந்துள்ளார்.
 
தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுக்க இன்று சமுக வலைதளங்களை ஆர்வமுடன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதிலும் ஃபேஸ்புக், ட்டிவிட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கைதான் நாளுக்கு நாள் மிக அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.  
 
குறிப்பாக, இந்திய பிரமதர் நரேந்திர மோடி, தான் சொல்ல விரும்பும் கருத்துக்களை மிக ரத்தினசுருக்கமாக, தனது ட்டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றார். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
 
இதனையடுத்து, இந்தியாவில் பல்வேறு அரசியல் தலைவர்களும் ட்டிவிட்டரில் இணைய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் கருணாநிதி, ஸ்டாலின், ராமதாஸ் ஆகியோர் ஏற்கனவே ட்டிவிட்டரில் கணக்கு வைத்து, வெளுத்து வாங்குகின்றனர்.  
 
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தற்போது ட்டிவிட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். இதுவரை அவர், 3 தகவல்களை மட்டுமே ட்வீட் செய்துள்ளார். இருப்பினும் அவரிடம் மக்கள் நிறைவே எதிர்பார்க்கின்றனர்.