வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (12:14 IST)

சென்னையில் முதல் முறையாக பன்னிரு திருமுறை திருவிழா! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்!

PR
IMPA ஏற்பாட்டில் சென்னையில் முதல் முறையாக பன்னிரு திருமுறை திருவிழா  மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமண விழா 16ம்  தேதி நடைபெற உள்ளது இந்நிகழ்ச்சியில்  மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் 10 ஆதீனங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்


 
 சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வருகின்ற 16ஆம் தேதி IMPA  அமைப்பின் ஏற்பாட்டில் சென்னை  நீலாங்கரையில் உள்ள ஆர்.கே கன்வென்ஷன் சென்டரில் பன்னிரு திருமுறை திருவிழா  மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமண விழா முதல் முறையாக நடைபெற உள்ளதாக  நிகழ்ச்சி நிர்வாகிகள் குழு வாசு, ஜோதிடர் செல்வி,ஜெகதீஷ் கடவுள், முத்துக்குமார சுவாமி உள்ளிட்டோர்  செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

 தொடர்ந்து பேசியவர்கள் திருமுறை திருவிழா நிகழ்ச்சியில் 108  ஓதுவ மூர்த்திகள் திருமுறை இசை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், நாதஸ்வர இசை, 100 மாணவர்களின் திருமுறை இசை பாடல்கள்,  திருமுறைகளால் அதிகம் நாம்  பயன் பெறுவது பொருளா? அருளா? தலைப்பில் பட்டிமன்றம் பிரபல பட்டிமன்ற தலைவர் சுக்கிசிவம் தலைமையில்  நடைபெற உள்ளதாகவும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் காலை 8 மணி முதல் மாலை வரை நடைபெற உள்ளதாகவும்  அனைத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு முதல் முறையாக இந்த முயற்சி மேற்கொள்ள உள்ளதாகவும் இந்த ஆர் கே சென்டரில்  10000 மக்கள் பங்குபெறும் வகையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்  தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதாகவும்,  வருகின்ற பக்தர்களுக்கு திருவான்மியூரில் இருந்து பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாகவும் அது மட்டுமல்லாமல் திருவாடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம், மயிலம் பொம்மபுற  ஆதீனம், சிரவை ஆதீனம், செங்கோல் ஆதீனம், துழாவூர் ஆதினம், வேளாக்குறிச்சி ஆதீனம்   உள்ளிட்ட ஆதீனங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க  உள்ளனர்.